Saturday, August 17, 2013

வைரத்தை ஏன் கேரட் என்ற அளவில் குறிப்பிடுகிறார்கள்?

தங்கத்தை கேரட்டில் குறிப்பிடும் போது அதன் தூய்மையை அது குறிக்கிறது. எந்த அளவுக்கு தங்கத்தில் செம்பு, வெள்ளி, கேட்மியம் சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதை கேரட் அளவுகோள் குறிப்பிடுகிறது. 

வைரம் முதலான நவரத்தினங்களில் கேரட் அளவீடு எடையைக் குறிப்பிடுகிறது. ஒரு கேரட் என்பது இருநூறு (200 மி) மில்லி கிராம். ஒரு பாரகான் என்பது 100 கேரட் வைரம அல்லது முத்து போன்ற வேறு கல்லாக இருக்கலாம். 100 கேரட் என்றால் 20 கிராம் என்று நீங்கள் இப்போது கணக்குப் போட்டிருப்பீர்கள். 

கேரட் என்பது கேரட் வகை செடியிலிருந்துதான் பெயரை எடுத்துக் கொண்டது. கேரட் செடிகள் கடுகு செடி இனத்தைச் சேர்ந்தது. இதன் கனிகள் சிலிக்குவா என்ற வகையைச் சார்ந்தது. 

சிலிக்குவா கனியாகாமல் காயாக இருக்கும் போதே இரண்டாகப் பிளந்து கொள்ளும். அதன் ஊடே பத்துப் பதினைந்து விதைகள் இருக்கும். ஒரு விதையின் எடை (தோராயமாக 200 மில்லி கிராம்) இருக்கும். முன்காலத்தில் எடை கற்களுக்கு செடிகளின் விதைகளையே தரமாகப் பயன்படுத்தினார்கள். 

விதைகள் எப்போதும் மாறாத எடையைப் பெற்றிருக்கும் என்று நம்பினார்கள். அது உண்மையல்ல. இருந்தாலும் இந்த காலத்து நேர்மையும் நம்பிக்கையும் எடையை சந்தேகிக்க இடம் தரவில்லை. மேலும் ஒரு செடியின் விதையையே எப்போதும் பயன்படுத்தியதால் நாளுக்கொரு எடை மாறுதல் என்கிற பிரச்சனை கிடையாது. 

இதேபோல் இந்தியாவிலும் தங்கத்தை எடைபோட குன்றி மணி என்ற விதை எடையாகப் பயன்படுத்தப்பட்டது. 1907ஆம் ஆண்டில்தான் விதைகளை எடைக்கற்களாகப் பயன்படுத்துவதை விடுத்து உலோகங்களை பயன்படுத்த ஆரம்பித்தனர். 

கேஸ் அடுப்பில் சமைக்கிறீர்களா-கவனம்....!

சில மாதங்களுக்கு முன்னர் நடந்த ஒரு உண்மை சம்பவம். 
ஒரு வீட்டில் சமயலறையில் கேஸ் அடுப்பில் குக்கரில் சமையல் ஆகிக்கொண்டிருக்கும்போது., அடுப்புக்கருகே ஒரு கரப்பான் பூச்சி ஓடுவதை கண்ட அந்த சகோதரி ., உடனே சென்று கரப்பான் பூச்சிகளை கொள்ளும் மருந்து ஸ்ப்ரேயை (spray ) கொண்டுவந்து அதன் மீது அடிக்க துவங்கினார்.ஒரு நொடிக்குள் அந்த spray இலிருந்து வெளிவந்த வாயுவுடன் சேர்ந்து வெடித்து அந்த சகோதரி மருத்துவமனையில் உயிருக்கு போராடி இறந்தாள். அவளை காப்பாற்ற சென்ற கணவரும் தீப்புண்களோடு மருத்துவமனையில். இது போன்ற spray மருந்துகள் ("RAID"..."MORTEIN" போன்ற) எப்போதும் எளிதில் தீப்பற்றக்கூடிய சாதனங்கள் என்பதை மறக்க வேண்டாம். அவைகளை பயன்படுத்தும்போது அருகில் எதுவும் எரியும் நிலையில் இருக்க வேண்டாம். எச்சரிக்கை.